இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை

12/10/2025 3:59:44 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

வாஷிங்டன்:  மத்திய பாஜ அரசு நேற்றிரவு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதாவை ‘தவறான திசையில் ஆபத்தான திருப்பம்’ என்று சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில், நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முன்மொழியப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து, சீக்கிய, பவுத்த,  சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள், டிசம்பர் 31, 2014 வரை, அங்கு மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இருந்தால், அவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்; இந்திய குடியுரிமை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த மத்திய அமெரிக்க ஆணையம் (யுஎஸ்சிஐஆர்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது  குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக கூறி உள்ளது.
ேமலும், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற முதன்மைத் தலைவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க  அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். இம்மசோதா மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது.

 புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான பாதையை குறிப்பாக முஸ்லிம்களை விலக்கி, மதத்தின் அடிப்படையில் குடியுரிமைக்கான சட்ட  அளவுகோலை இந்த மசோதா அமைக்கிறது. குடியுரிமை திருத்த மசோதா என்பது தவறான திசையில் ஒரு ஆபத்தான திருப்பம்; இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்மைத்துவ வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து இயங்குகிறது’  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • தென்னாப்பிரிக்க அழகி மிஸ் யுனிவர்சாக தேர்வு



  • அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை



  • கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்



  • கோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்



  • இலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்



  • இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கோத்தபய ராஜபக்சே முன்னிலை



  • ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய - சஜித் பிரேமதாசா கடும் போட்டி: இலங்கையில் விறுவிறு வாக்குப்பதிவு... வாக்காளர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல், துப்பாக்கி சூடு



  • இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்



  • ஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்



  • ஐஎஸ் அமைப்பின் தலைவன் பாக்தாதி சகோதரி கைது: துருக்கி அதிகாரிகள் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]