இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் நடிகை நயன்தாராவை காண திரண்ட ரசிகர்கள்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

12/10/2025 3:43:39 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

கன்னியாகுமரி: மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள நடிகை நயன்தாரா, நேற்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  கன்னியாகுமரி பகவதியம்மனின் மகிமையை விளக்கும் வகையில் மூக்குத்தி அம்மன் என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்துக்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  பகவதியம்மன் கோயிலில் மிக ரகசியமாக நடந்தது.
வெளிநாட்டில் இருந்ததால் படத்தின் பூஜையில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை. பட பூஜைக்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் விரதம் தொடங்கி விட்டனர் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் நடிகை நயன்தாரா வெளிநாட்டில்  இருந்ததால் விரதம் தொடங்க வில்லை என்று சொல்லப்பட்டது. சமீபத்தில் சென்னை திரும்பிய நயன்தாரா, நேற்று இரவு திடீரென கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வந்தார்.

அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இரவு சுமார் 7 மணியளவில் நடிகை நயன்தாரா வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியாக கோயிலுக்குள் சென்றார். அவருடன் காதலன் விக்னேஷ் சிவனும் வந்தார். பகவதியம்மன் முன்பு  சுமார் அரை மணி நேரம் நடிகை நயன்தாரா அமர்ந்து வேண்டினார். அதைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தை சுற்றி தரிசனம் செய்தார். தற்போது சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

 கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த நடிகை நயன்தாரா, ஐயப்ப பக்தர்களை வணங்கினார். நடிகை நயன்தாரா  வந்திருந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர். அவரது காரை சுற்றிலும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெரும் சிரமத்துக்கு இடையே காவல்துறையினர் பாதுகாப்பாக நடிகை நயன் தாராவை அனுப்பி வைத்தனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு முழுவதும் கன்னியாகுமரியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பெண் போலீஸ் செல்பி

நடிகை நயன்தாரா வருகையை முன்னிட்டு பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் போலீசாருடன் இணைந்து நடிகை நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் இணைந்து போட்டோ எடுக்க போலீசாரும்  அதிக ஆர்வம் காட்டினர்.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]