இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்

12/10/2025 2:52:10 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது. அஜித் பவார் தன்னை துணை முதல்வராக்க கட்சியினர் விரும்புவதாக கூறுவதால், அம்மாநில அரசியலில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த பிறகும், அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக புதிய சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. கடந்த நவ. 28ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருடன் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் எவருக்கும் இதுவரை அமைச்சரவையில் இலாகா ஒதுக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மூன்று கட்சிகளின் கூட்டணிக்குள் இன்னும் ஒருமித்த கருத்தை உருவாக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக ‘துணை முதலமைச்சர்’ பதவி தொடர்பான இழுபறி நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘பட்நவிஸ் முதல்வராக பதவியேற்ற போது, என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளை தொடர்ந்து அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் என்சிபி கட்சிக்கே வந்துவிட்டார். தற்போது, என்சிபி கட்சி தரப்பில் அஜித் பவாரை துணை முதல்வராக மீண்டும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதனால்தான், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது’ என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் மற்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் சோலாப்பூரில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒன்றாகக் காணப்பட்டனர். இந்த சந்திப்பில், இவர்கள் மகாராஷ்டிர அரசியல் வானிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  இதுகுறித்து, ​​அஜித் பவார் கூறுகையில், ‘‘பட்நவிசுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி விவாதிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமரவேண்டி இருந்தது.

ஆனால் நாங்கள் ‘அரசியல் வானிலை’ குறித்து பேசவில்லை. கட்சி நிர்வாகிகள், துணை முதல்வராக பார்க்க விரும்புகிறார்கள். இது தொடர்பாக இறுதி முடிவை கட்சித் தலைவர் (பவார்) எடுப்பார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு எடுப்பார்’’ என்றார். இதுகுறித்து, என்சிபி தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘கட்சியும் அரசாங்கமும் அவரது (அஜித் பவார்) தலைமையில் பலம் பெறும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு பவாரிடம் இருக்கும். அஜித் துணை முதலமைச்சராக மாறுவதை  எதிர்க்கவில்லை’’ என்றார்.

மேலும் சில
  • மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்



  • மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’



  • பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு



  • ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’



  • உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்



  • கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை



  • மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்



  • உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு



  • கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது



  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]