நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்
12/9/2025 3:34:08 PM
நாகர்கோவில்: நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் மாணவியை பள்ளிக்கு அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிக்கினார். நாகர்கோவிலில் உள்ள பிரபல மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். விடுமுறை தினமான நேற்று (ஞாயிறு) மதியம் பள்ளியின் பின்புற நுழைவு வாயில் வழியாக ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைவதை பொது மக்கள் சிலர் பார்த்தனர். இவர் அந்த பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் விளையாட்டு பயிற்சிக்காக விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகளை இவர் வரவழைப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் யாருக்கும் தெரியாமல் பின்புறம் வழியாக செல்கிறாரே? என்று பொது மக்கள் சிலர் சந்தேகம் அடைந்தனர். பள்ளி வராண்டாவிலும் யாரும் இல்லை. இதற்கிடையே மாணவி ஒருவரும் உள்ேள நுழைந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், திடீரென பள்ளிக்குள் சென்றனர். அங்கு ஒரு அறையில் மாணவியிடம் வலுக்கட்டாயமாக ஆசிரியர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.