இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு

12/9/2025 3:28:59 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

சோமனூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், கோவை மாவட்டம் சோமனூர் பகுதியிலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலும் விசைத்தறிகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலானோர், கூலி அடிப்படையில் நெசவு செய்யக்கூடிய விசைத்தறியாளர்களாக உள்ளனர். இவர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு மற்றும் நூல்களை பெற்று துணி உற்பத்தி செய்து கொடுத்து மீட்டர் அடிப்படையில் அதற்கான கூலியை பெறுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கி வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒப்பந்த கூலியை கூட இதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை. தற்போது 6 ஆண்டு கடந்த நிலையில் அடுத்தகட்ட கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் கடந்த மாதம் இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, இதனால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் பிரேமா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் 24ம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு 15 சதவீத விசைத்தறிகளை பழைய இரும்புக்கு விற்றுவிட்டு விசைத்தறி தொழிலை நடத்த முடியாமல் மூடி உள்ளனர். இதனால், பல விசைத்தறி கூடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. சில விசைத்தறி கூடங்கள் வாடகை வீடுகளாக மாற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள விசைத்தறியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளும் விசைத்தறியாளர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் 2 லட்சம் விசைத்தறியாளர்கள் அடுத்த மாதத்தில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]