இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

12/9/2025 3:26:25 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

ஐதராபாத்: தெலங்கானா போலீசாரால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்டர் சம்பவ வழக்கை, எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டிசாவை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது கடந்த 6ம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுன்டரில்  சுட்டுக் கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.

மேலும் இன்று வரை  உடலை பதப்படுத்தி வைக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஐதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் என்கவுன்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை  தெலங்கானா அரசின் தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷி அமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான்கு பேரின் மரணத்திற்கு வழிவகுத்த காரணங்கள், சூழ்நிலைகள் கண்டறியப்பட்டு உண்மையை நிலைநாட்ட வேண்டி உள்ளது. மேலும் இந்த வழக்கின் உண்மையை உறுதிப்படுத்த முழுமையான விசாரணைக்கு வசதியாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம்.பகவத் தலைமையிலான எட்டு பேர் கொண்ட எஸ்ஐடி குழு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி என்கவுன்டர் வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தும். எஸ்ஐடி விசாரணையை முடித்து, அவை நீதிமன்றத்தின் முன் அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்



  • மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்



  • ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’



  • உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்



  • கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை



  • மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்



  • உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு



  • கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது



  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]