இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம்

12/9/2025 3:11:26 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 8 நாட்களாக தினமும் பகலில் விநாயகரும், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து வருகின்றனர். 7ம் நாளான நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. காலை முதல்நள்ளிரவு வரை 5 தேர்கள் அடுத்தடுத்து மாடவீதியில் பவனி வந்தன.

விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் காட்சி தரும்.மகா தீப தரிசனத்தை காண திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்ஜ், மண்டபங்கள், ஆசிரமங்கள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியுள்ளது.

நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும். மகா தீபம் ஏற்றும்போது 2500 பக்தர்கள் மட்டும் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி சீட்டு நாளை காலை 6 மணி முதல் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் வழங்கப்படும். மலை ஏற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகலை காண்பித்து அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில் 13ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை மிதந்து கொண்டு இருக்கிறது.

சந்திரசேகரர் வீதியுலா

தீபத்திருவிழாவின் 9ம் நாளான இன்று காலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வருகின்றனர்.

மலை உச்சிக்கு சென்றது தீப கொப்பரை

மகா தீபம் ஏற்றப்படும் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட தீபகொப்பரை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி (காடா துணி) நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை 3ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் தீபகொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொப்பரையை தலை சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி, நெய், கற்பூரம் ஆகியவை நாளை காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]