இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்

12/9/2025 3:06:10 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசாரை, அம்மாநில காவல்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 5ம் தேதி ரயில் நிலையம் சென்ற வழியில் பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த சிவா, சுபம் உள்ளிட்ட 5 பேர் அப்பெண்ணை அடித்து, கத்தியால் குத்தி பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்.

இதில் அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. டெல்லியில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவத்தை, பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், உன்னாவ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் எரிக்கப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக காவல் நிலைய அதிகாரி உட்பட ஏழு போலீஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

காவல் நிலைய பொறுப்பாளர் (இன்ஸ்பெக்டர்) எஸ்.ஓ.அஜய் திரிபாதி, இரண்டு துணை ஆய்வாளர்கள் அரவிந்த் சிங் ரகுவன்ஷி மற்றும் ஸ்ரீ ராம் திவாரி மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றக் கட்டுப்பாடு மற்றும் வழக்குகள் தொடர்பான சம்பவங்களில் பணியில் அலட்சியம் காட்டியதாக இடைநீக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘‘ஏற்கனவே இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனையை உறுதி செய்யும்’’ என்றார்.

மேலும் சில
  • மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்



  • மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்



  • பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு



  • ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’



  • கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை



  • மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்



  • உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு



  • கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது



  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]