இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

12/8/2025 2:14:40 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

சென்னை: ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கமாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ெசன்ைன வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இன்றைய அரசியல் சூழல் என்ற தலைப்பில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி ராணி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ், சிரஞ்சீவி, தாமோதரன், வக்கீல் செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, இரா.மனோகர், நாஞ்சில் பிரசாத், சுமதி அன்பரசு, ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. அவர்களது நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்களில் 2 பேர் வீடுகளில் பாஜ அரசு சோதனை நடத்தியது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி., பாஜவில் போய் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமை தான்.டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200ஐ தொட்டுவிட்டது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 3.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் நாடு எவ்வாறு உயரும்?. இப்போது கார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்து தவித்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் தொடங்கும்போது அவர்கள் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதாவது, 5 முதல் 8 சதவீதம் வரையிலும், 8 முதல் 12 சதவீதம் வரையிலும், 12 முதல் 18 சதவீதம் வரையிலும் வரியை கூடுதலாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சி தான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல்



  • மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி



  • பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த குடும்பம் ராஜஸ்தானில் விஷ ஊசி போட்டு 11 பேர் கொலை? குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்



  • முதல்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பலி: ஆயிரத்தை தாண்டியது: 62 ஆயிரம் பேர் பாதிப்பு



  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]