இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தொழிற்சாலையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்: டெல்லி தீ விபத்தில் 43 பேர் பரிதாப பலி

12/8/2025 1:56:11 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

* தூங்கிக் கொண்டிருந்த பல தொழிலாளர்கள் மரணம்
* நெரிசலான பாதையால் மீட்பு பணி தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 43 பேர் பலியானதாகவும், அதில் பல தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது தீவிபத்தில் சிக்கி பலியானதாகவும், நெரிசலான பாதை மற்றும் குடியிருப்புகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியின் ராணி ஜான்சி சாலையில் உள்ள 6 மாடி கொண்ட ஒரு தொழிற்சாலையில், இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிற்சாலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். ஒரே மரண பீதியால், அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீவிபத்து மீட்பு குழுவினர் 35 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று, சம்பவ இடத்தில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட சிலர் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் முதற்கட்ட தகவலில் தெரிவித்தது. மீட்கப்பட்ட மற்றும் காயமடைந்த பலர் ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், 2 தனியார் மருத்துவமனைக்கும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீ விபத்து சம்பவம் காரணமாக உடனடியாக இப்பகுதியில் சாலை போக்குவரத்தை மூடினர். வாகன ஓட்டிகள் ராணி ஜான்சி ஃப்ளைஓவரைப் பயன்படுத்துமாறும், செயின்ட் ஸ்டீபனில் இருந்து ஜான்டேவலனுக்கு வரும் பயணிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தீயணைப்பு தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், “600 சதுர அடி நிலப்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது. இது ஒரு தொழிற்சாலை; பள்ளி பைகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் இதுவரை 56 பேரை மீட்டு மருத்துவ உதவிக்காக எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் மயக்கம் அடைந்தனர். சம்பவம் நடந்தபோது சுமார் 20 முதல் 25 தொழிலாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததாக உரிமையாளர் கூறினார். இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளதாக போலீஸ் தகவல் கூறுகிறது’’ என்று தெரிவித்தார். முன்னதாக, நெரிசலான பாதைகள் மற்றும் குறுகிய நுழைவாயில்களால், தீயணைப்பு வீரர்களுக்கு வாகனங்களை கொண்டு செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பே, அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஏற்கனவே மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். ராணி ஜான்சி சாலை மத்திய டெல்லியில் அமைந்துள்ளது. இது அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அதிகளவில் உள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொழிற்சாலையின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். தொழிற்சாலையின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மிகப்பெரிய தீவிபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவையின் தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறுகையில், ‘‘மூச்சுத்திணறல் காரணமாக சிலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் கட்டிடத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க, தீயணைப்பு மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள் நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும்’’ என்று கூறினார்.

இன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி அமைச்சர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]