இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு

12/7/2025 2:08:05 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திருமலை: கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களையும் அடக்கம் செய்ய ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிசாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் முகமது ஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் 4 பேரும் பெண் டாக்டரை எப்படி எரித்துக்கொன்றார்கள்? என சம்பந்தப்பட்ட இடத்தில் அவர்கள் நடித்துக் காண்பிப்பதை வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, நேற்று அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்திற்கு போலீசார்  அழைத்து சென்றனர்.

அங்கு வேனில் இருந்து இறங்கிய 4 குற்றவாளிகளையும் நடித்து காண்பிக்கும்படி போலீசார் கூறினர். ஆனால் அதிகாலை என்பதால் கும்மிருட்டில் 4 குற்றவாளிகளும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முயன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட மற்ற போலீசார் 4 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 மீட்டர் இடைவெளியில் 4 குற்றவாளிகளும் பலியாயினர். மேலும் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயமடைந்தனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் இரவு இறுதிச்சடங்கு செய்ய முகமது ஆரிப் சொந்த ஊரான ஜெக்சல், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோரின் ஊரான குடிகன்லாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக தெலங்கானா ஐகோர்ட்டில் நேற்றிரவு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இந்த வழக்கை ராமச்சந்திர ராவ், லட்சுமண்ராவ் தலைமையிலான நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.பிரசாத் ஆஜராகி, என்கவுன்டரில் உயிரிழந்த குற்றவாளிகளின் சடலங்கள் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்ததாகவும், பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை 4 பேரின் சடலங்களையும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை மெகபூப்நகர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் 4 பேரின் சடலங்கள் இறுதிச்சடங்கு செய்யப்படாமல் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் ஊடகங்களில் வந்த காட்சிகளின் ஆதாரமாக வைத்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]