இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்

12/7/2025 2:03:26 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 பேர் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட மற்றும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். வழக்கை வாபஸ் செய்யக் கோரி, பலாத்கார கும்பல் தீ வைத்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களில் ஒருவன் தப்பி விட்டான். கைதான மற்றொருவன் கடந்த 10 நாள்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான். இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார். அப்போது, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் உள்பட 5 பேர் கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி, அந்தப் பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர்.

அலறி துடித்த அந்த பெண்ணை, அப்பகுதியினர் மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங்  மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து, அந்தப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்த டெல்லி மருத்துவமனை மருத்துவர் சுனில் குப்தா கூறுகையில், அந்த பெண் சுயநினைவோடுதான் இருந்தார். அவர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தாலும், எங்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப எங்களிடம் கூறிக்கொண்டே இருந்தார். நான் உயிரோடு திரும்பி வருவேனா?’ என எங்களிடம் கேட்டார். `என்னைக் காப்பாற்றுங்கள். நான் வாழ விரும்புகிறேன்’’ என்றார். இந்நிலையில், வெண்டிலேட்டரில் சுயநினைவை இழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நேற்று இரவு 11.10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, சஃப்தர்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு தலைவர் சலப் குமார் கூறுகையில், ‘‘90 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த ெபண்ணுக்கு, இரவு 11.10 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரவு 11.40 மணிக்கு உயிரிழந்துவிட்டார்’’ என்றார்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிடம், உள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெற்றுச் சென்றார். தற்ேபாது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தற்ேபாது உயிரிழந்ததால் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:  பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய 5 பேரில் குற்றம் சாட்டப்பட்ட சிவம் திரிவேதி மற்றும் சுபம் திரிவேதி ஆகியோர் தீவைத்து கொளுத்தியவர்கள். ஹரிசங்கர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய், ராம் கிஷோர் திரிவேதி ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ெபண்ணிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர் மறுத்துவிட்டதால், தீவைத்து ெகாளுத்தி உள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த பெண் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க லக்னோ காவல் ஆணையர், உன்னாவ் ஏஎஸ்பி வினோத் பாண்டே தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் அலட்சியம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ‘‘என் பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இதுெதாடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வழக்கை வாபஸ் செய்யக் கோரி தொந்தரவு செய்தனர். என் மகளை எரித்த ஐந்து பேரையும் உன்னாவோ காவல்துறையினர் சுட்டுக் கொன்றால்தான் நான் ஆறுதலடைவேன். அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் கிடைத்த போதிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டது. எனது உறவினரின் கடைக்கு தீ வைப்பதாக மிரட்டினர். உங்களால் வாழ அனுமதிக்கமாட்டோம். போலீசாரிடம் தெரிவிப்போம் என்று கூறியபோதும், பெரிய மனிதர்கள் மூலம் எங்களை அடிக்கவைத்தனர். அதனை மீறியும் போலீசில் புகார் அளித்தோம். ஆனால், மகளை கொன்றுவிட்டனர்’’ என்றார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]