இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி

12/6/2025 2:43:42 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான நாளை அண்ணாமலையார் தேர் உள்பட 5 தேர்களின் (பஞ்ச ரதங்கள்) பவனி நடக்கிறது. இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலையிலும் இரவிலும் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 5ம் நாளான நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டனர். இன்று காலை 6ம் நாள் உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர், யானை வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் தனித்தனி விமானத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இரவு வெள்ளி ரத உற்சவம் நடைபெறுகிறது.7ம் நாளான நாளை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடக்கிறது. நாளை காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.

முதலாவதாக விநாயகர் தேர் மாடவீதிகளில் பவனி வந்தபிறகு சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வரும். ‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் பெரிய தேர் பவனி நடைபெறும். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் எழுந்தருளும் அம்மன் தேர் மாடவீதிகளில் பவனி வரும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து செல்வார்கள் என்பது தனிச்சிறப்பாகும். நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும். காலை முதல் இரவு வரை நடைபெறும் தேரோட்டத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என தெரிகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இதேபோல், அம்மன் தேரோட்ட பாதுகாப்பு பணியில் சுமார் 200 பெண் போலீசார் ஈடுபட உள்ளனர்.மகாதீபத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. வரும் 10ம்தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]