இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது...? 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்

12/6/2025 2:36:57 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

ஐதராபாத்: இளம் எஸ்பியாக இருந்த காலத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தில் 3 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது இன்றைய சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படைதான். அவரது தலைமையிலான குழுதான், இன்று பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. இது, 2008 சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ெதலங்கானா மாநிலத்தின் ககாதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இரண்டு பெண் பொறியியல் மாணவிகள், கடந்த 2008 டிசம்பரில் ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில், பொதுமக்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தினர். வாரங்கலில் ஆசிட் வீசிய மூன்று இளைஞர்கள் 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீசார் ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொன்றனர்.

கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஆதாரங்களை சேகரிப்பதன் ஒரு பகுதியாக 3 குற்றவாளிகளும் குற்றம் நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ‘அந்த 3 பேரும் ஆயுதம் மற்றும் ஆசிட்டால் போலீசாரை தாக்க முயன்றனர். அதனால், காவல்துறையினர் தற்காப்புக்காக மூவரையும் சுட்டுக் கொன்றனர்’ என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வாரங்கல் மாவட்ட இளம் போலீஸ் சூப்பிரண்ட்டாக இருந்த விஸ்வநாத் சஜ்ஜனாரை, பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினர். அவரை தங்களது தோள்களில் ஏற்றி கொண்டாடினர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது சம்பவம் நடந்திருந்தாலும்கூட, ஆந்திர காவல்துறையின் வரலாற்றில் அந்த இளம் எஸ்பி சஜ்ஜனார், அவரது சகாக்களால் ‘அமைதியான ஆப்ரேட்டர்’ என்று அழைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியும், சைபராபாத்தின் போலீஸ் கமிஷனருமான சஜ்ஜனார், மீண்டும் தற்போது ஒரு புதிய சூழலை எதிர்கொண்டுள்ளார். அதுதான், ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் டிசா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வை, 4 பேர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றது. பொதுமக்களின் பெரும் கோபத்தால், தெலங்கானாவே போராட்டக் களமாக மாறியது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. குற்றம்சாட்டப்பட்ட அந்த 4 பேரையும் சுட்டுத் தள்ள வேண்டும். பொது இடத்தில் வைத்து தாக்கி ெகால்ல வேண்டும் என்றெல்லாம் பெண் எம்பிக்கள் பேசி, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். ேமலும், ‘தனது சகோதரியை அழைத்ததற்கு பதிலாக, ‘100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டயல் செய்திருக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி அளித்த அறிக்கை, மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. போலீசாரும், இந்த வழக்கைக் கையாண்ட விதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்.

‘தெலங்கானா போலீசார் மீண்டும் தங்களை ‘ஹீரோ’வாக வெளிப்படுத்த வேண்டும். வெறும் கைது செய்வதைத் தவிர வேறொன்றையும் செய்ய வேண்டும்’ என்ற அர்த்தங்களில் கடந்த ஒருவாரமாக ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பிரசாரங்கள் நடந்தன. இவ்விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், கடந்த ஒருவாரமாக போலீஸ் உயரதிகாரிகள் ‘வேறு ஏதாவது’ என்ற அடிப்படையில் தீவிர ஆலோசனை நடத்தினர். முன்னதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனை பெற்றுத் தருவதற்காக சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட்டார். ஆனால், போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார், டிச. 13, 2008 இரவு வாரங்கல் ‘என்கவுன்டர்’ சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ‘அந்த’ சம்பவத்தை நடத்தி முடித்தனர்.

ஆனால், டிசா விஷயத்தில், அப்படி உடனடியாக நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். காரணம், குற்றவாளிகளிடம் இருந்து  வாக்குமூலம், தடயவியல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற ஆதாரங்களை பெற்று, சம்பவத்தை உறுதிசெய்த பின்னரே, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் இன்று அதிகாலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இன்றைய சம்பவத்திலும், வழக்கம்போல் போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றதால், போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள, என்கவுன்டர் நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், என்கவுன்டர் திட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சிலர் கருதினாலும், சில அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகள் வந்த பின்னரே, இன்றைய முடிவு எடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]