இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு

12/5/2025 3:41:02 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

நாக்பூர்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தன் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல்  ஆணையத்திடம் மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, ஜன.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்நவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி பிரிவு களில், இரு  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்ந விஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல்  ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, வழக்கறிஞர் சதிஷ் உகே, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு  தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக  கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்நவிசின் நாக்பூர் வீட்டிற்கு, கடந்த வாரம், ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.

 இந்நிலையில், நேற்று, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்நவிஸ்  சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உதய் தாப்லே, ‘’தவிர்க்க முடியாத காரணங்களால், பட்நவிஸ் நேரில் வர  முடியவில்லை. இவ்வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’’ என கேட்டுக்  கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சதிஷ் உகே, ‘’நேரில் ஆஜராகக் கூடாது என, பட்னவிஸ் முடிவெடுத்துள்ளார். அவர் ஆஜராக  தேவையில்லை’ என, அவரது வழக்கறிஞர், நவம்பர் 4ம் தேதி பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். ‘’ஆகவே, திட்டமிட்டு  நீதிமன்றத்திற்கு வராத பட்நவிசுக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும்,’’ என, வலியுறுத்தினார். இரு தரப்பு  வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் எஸ்.டி.மேதா, வழக்கு விசாரணையை, ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்து  உத்தரவிட்டார்.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]