இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிசூடு இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்...2 வீரர்கள் பலி, 3 பேருக்கு சிகிச்சை

12/5/2025 3:39:31 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

ஹவாய்: அமெரிக்கா ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படை தளபதி  பதாரியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அமெரிக்க வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று  வருகின்றனர்.அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பரில் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் அமைந்துள்ளது.  இந்த தளத்தில் பசிபிக் விமானப்படை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் பங்குபெறுவதற்காக  இந்தியா விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து சென்றிருந்தனர்.

இந்தநிலையில் இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடற்படை மற்றும் இந்திய விமானப்படை  கூட்டுப் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது. அதில் இந்திய விமானப்படை தளபதி, அமெரிக்கா அதிகாரிகள் பலர்  பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் கப்பல் கட்டும் தளத்திற்குள் திடீரென கடற்படை வீரர்கள் உடையில் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.  அவர் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பயிற்சியில்  ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் விமானபடையினர் மீது குண்டு சரமாரியாக பாய்ந்தது. அதில், அமெரிக்காவை சேர்ந்த  பாதுகாப்புத்துறை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர், மேலும் 3 பேர் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர், தாக்குதலுக்கு பின்பு தனது தலையில் தானே  சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.  இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் அவர்  மீது துப்பாக்கி தாக்குதல் நடக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் உடனிருந்த இந்திய  அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில்  ஈடுபட்டவர் அமெரிக்க  பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரி என்று தெரிவந்துள்ளது. மேலும் இறந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று   வருபவர்களின் விவரங்களை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இந்திய விமானப்படை தளபதி பங்குபெற்ற நிகழ்ச்சியில்  இந்த திடீர் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஹவாய் பியர்ல் ஹார்பரில் கடந்த 1941ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 2403 வீரர்கள் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பெய்ரூட்டில் குடோனில் சேமித்து வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து 78 பேர் உடல் சிதறி பலி: 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அவசரநிலை பிரகடனம்



  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]