இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு இடஒதுக்கீடுதான் பின்பற்றப்படுகிறது

12/5/2025 3:28:39 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டை தான் மாநில  தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள்,  எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள்  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை  வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி  அறிவித்தார். இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர்  அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்தும் வார்டு மறுவரையறை பணிகளை முழுமையாக முடித்த  பின்புதான் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வருகிறது.

தற்போது, தேர்தல் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு  வெளியிடப்பட்ட இடஒதுக்கீட்டைதான் மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றுவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதன்படி  12 ஆயிரத்து 524 ஊராட்சி மன்ற தலைவர், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்  பதவிகளுக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு தான் பின்பற்றப்படுகிறது.

இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:  2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு வரையறை ெசய்யப்பட்டு 2016ம் ஆண்டு தேர்தல்  அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு தடைவித்த சென்னை உயர் நீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கள்தொகை  கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது. அதன்படி வார்டு மறுவரையறை  செய்யப்பட்டது. இதில் வார்டுகளின் எல்லைகள் மட்டுமே மாறியுள்ளது. எண்ணிக்கை மாறவில்லை. எனவே தலைவர் பதவிகளுக்கான  இடஒதுக்கீடு மாற்றப்படவில்லை. இதன்படி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட  இடஒதுக்கீடுதான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



  • சிறுமியை தகாத வார்த்தையால் பேசிய விவகாரம் புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் 8 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு



  • 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]