இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர் 4ம் நாள் தீப திருவிழாவை முன்னிட்டு நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

12/4/2025 3:50:32 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான இன்று விநாயகர் மூஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் நாக  வாகனத்திலும் பவனி வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு அலங்கார  மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள், ராஜகோபுரம் எதிரே 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

 பின்னர் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் சிம்ம  வாகனத்தில் அண்ணாமலையாரும், அன்ன வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி  வந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாடவீதி முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 4ம் நாளான இன்றுகாலை மூலவர் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து  மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது.

மூஷிக வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மங்கள வாத்தியங்கள்  முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  மாலை 6 மணியளவில் கோயிலில் உள்ள கலையரங்கில் பரத நாட்டியமும்,  ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும், காமதேனு  வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி நடைபெறும்.

மேலும் சில
  • திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி



  • இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு



  • உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்



  • காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்



  • ‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு



  • வீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி



  • ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது



  • மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு



  • சிறுமியை தகாத வார்த்தையால் பேசிய விவகாரம் புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் 8 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு



  • 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]