இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தனியார் பல்கலை கல்விக் கட்டண விவகாரம்: மத்திய அரசு முடிவுக்கு பெண் அதிகாரி எதிர்ப்பு...ட்விட்டில் கருத்து தெரிவித்துள்ளதால் சர்ச்சை

12/3/2025 4:42:17 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

புதுடெல்லி:  பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருந்த ஷமிகா ரவி, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின்  செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். முன்னதாக, பொருளாதார மந்தநிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘நாட்டின்  பொருளாதாரத்தில்  மந்தநிலை ஏற்பட்டுள்ளது’ என்று பதிவிட்டார். இவ்வாறு வெளிப்படையாக  கருத்துகளை தெரிவித்து வந்தநிலையில், அவர்  பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்  குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படையாக  ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை முறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு  எடுத்த முடிவு குறித்து ஷமிகா ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஷமிகா கூறியதாவது:  தனியார் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை முறைப்படுத்துதல் என்பது ஒரு தவறான முடிவு. இந்த விஷயங்களை செய்வதற்கு பதிலாக அரசு  பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அத்துடன் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்திய  உயர்கல்வி வளர வேண்டும் என்றால், இம்மாதிரியான சோசியலிஷ கொள்கைகளை அரசு கைவிட வேண்டும். தரம் இருக்கும் பட்சத்தில் அதிக செலவு  செய்து படிக்க வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.

தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலித்தாலும், அங்கே படிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான், தனியார்  பல்கலைக் கழகங்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. சிலர் உயர் கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பள்ளிக்  கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால், உயர் கல்வியை அப்படி எல்லோருக்கும் இலவசமாக கொடுக்க  முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஷமிகாவின் கருத்துக்கு, இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ‘நீங்கள்  எல்லா வழிகளிலும் வளர்ச்சி பெற்றுவிட்டீர். நியூயார்க் சென்று பி.எச்டி பட்டம் பெற்றுவிட்டீர். ஏழை மக்கள் கல்லூரிக் கல்விக்குத் தகுதியற்றவர்கள்  என்பது போல் சொல்கின்றீர்’ என்பது உள்பட பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]