இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி போலீஸ் குடியிருப்பில் சிறுமி பலாத்காரம்: ஒடிசா ஏட்டு உட்பட 4 பேர் கும்பல் அட்டூழியம்

12/3/2025 4:41:19 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

புரி: வீட்டுக்கு காரில் அழைத்து செல்வதாக கூறி, போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர்  கும்பலை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர்.  கடந்த வாரம் ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவரை, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு  முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள்  குரல் எழுப்பி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்றும், நடுரோட்டில் மக்கள் முன்பாக அடித்துக்  கொல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பேசி வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் 4 பேர்  கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு புரி பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர், மெல்லிசை விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். நிமாபரா  பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் போது, அவ்வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல், அந்த சிறுமியிடம் அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக  தெரிவித்தனர். அதற்கு சம்மதம் தெரிவித்த சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு, சிறிது தூரம் ெசன்றதும் அப்பகுதியில் போலீஸ் குடியிருப்புக்குள்  அழைத்துச் சென்று அந்த சிறுமியை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  சில மணி நேரம் கழித்து அந்த சிறுமியை, அவரது வீட்டுப் பகுதியில் இறக்கிவிட்டு சென்றனர். மனமுடைந்த நிலையில் இருந்த சிறுமியிடம் அவரது  பெற்றோர் விசாரித்தபோது, 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதையடுத்து, கும்பார்பாடா காவல் நிலையத்தில்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், 4 பேர் கும்பலில் ஒருவனின் அடையாள  அட்டையை (ஐடி கார்டு) போலீசிடம் கொடுத்தார். அதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஐடி கார்டில் இருப்பவர், ஏற்கனவே சஸ்பெண்ட்  செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சேத்தி என்பது தெரியவந்தது. அதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஜிதேந்திர சேத்தி உட்பட 4 பேரை போலீசார்  தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். போலீஸ் குடியிருப்புக்குள் வைத்து சிறுமியை  பலாத்காரம் செய்த விவகாரம் ஒடிசாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கும்பார்பாடா காவல் நிலைய ஆய்வாளர்  குலமணி சேத்தி கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிைய காரில் அழைத்து சென்று அவரது  வீட்டில் விடுவதற்காக, போலீஸ் குடியிருப்புக்குள் வைத்து பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு உட்பட நான்கு பேரையும் கைது செய்ய 4 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் சில
  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



  • சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]