இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தான் அணியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி கேப்டன் சர்ப்ராஸ் ‘கம்பேக்’.. பிரதமர் இம்ரான் கான் ஆதரவால் வாய்ப்பு

11/19/2019 4:29:04 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரும், பயிற்சியாளருமான முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் அவர் கேப்டன் பதவியிலிருந்து மட்டுமின்றி அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிகளில் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அசார் அலி அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தான்  அணிக்காக 49 டெஸ்ட், 116 ஒருநாள், 58 சர்வதேச டி20 போட்டிகளில்  விளையாடியுள்ள சர்ப்ராஸ் அகமது, இதுவரை 5,771 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சர்ப்ராஸ் அகமது மீண்டும் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது தொடர்ந்து அணியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி  மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 தொடரை 0-2 என்ற  கணக்கில் தோற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல்  டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (நவ. 21) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறுைகயில், “சர்ப்ராஸ் அகமது அணியில் சேர வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும். சிறப்பாக விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணியில் ‘கம்பேக்’ தருவார். டி20 போட்டியை கொண்டே ஒரு வீரரின் ஆட்டத்திறனை தீர்மானிக்க முடியாது. பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டதன் மூலம், அணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]