இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்

11/19/2019 3:57:06 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 70 ஆயிரம் முதல் 1லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கிச்செல்கின்றனர். அதன்படி ஒவ்வொரு பக்தரும் சுமார் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்றுச்செல்கின்றனர். லட்டுகளை பக்தர்கள் கொண்டு செல்ல இதுவரை 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர்கள் தேவஸ்தானம் சார்பில் 3 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையான இன்று முதல் லட்டு பிரசாதங்களை பேப்பர் பெட்டி மற்றும் சணல் பைகளில் பக்தர்கள் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

இதற்காக ஒரு லட்டு வைக்கும் விதமான அட்டைப்பெட்டி 3 ரூபாய், 2 லட்டுகள் வைக்கும் அட்டைப்பெட்டி 5 ரூபாய், 4 லட்டுகள் வைக்கும் அட்டைப்பெட்டி 10 ரூபாய் என தேவஸ்தானம் விலையை நிர்ணயித்து விற்பனை செய்கிறது.
அதேபோல் 5 லட்டுகள் வைக்கும் சணல் பை ₹25, 10 லட்டுகள் வைக்கும் சணல் பை ₹30, 15 லட்டுகளுக்கு ₹35, 25 லட்டுகளுக்கு ₹55 என்ற விலையில் சணல் பை விற்பனை செய்கிறது. லட்டு பிரசாதம் பெறும் பக்தர்கள் பேப்பர் பெட்டி அல்லது சணல் பைகளில் மட்டுமே லட்டுகளை கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சணல் அல்லது பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சில
  • பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல்



  • மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி



  • பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த குடும்பம் ராஜஸ்தானில் விஷ ஊசி போட்டு 11 பேர் கொலை? குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்



  • முதல்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பலி: ஆயிரத்தை தாண்டியது: 62 ஆயிரம் பேர் பாதிப்பு



  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]