தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைவு
11/12/2025 3:34:15 PM
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,973க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் பின்னர் குறைந்தும் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவும் உள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 14 குறைந்து ரூ. 3,622க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,636 ஆக இருந்தது. அதேபோல, நேற்று 29,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,976 ரூபாயாக குறைந்துள்ளது. இதன்படி இன்று சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.