இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பூரி கட்டையால் சரமாரி அடித்து மனைவியை கொன்ற கணவன் கைது: திருவொற்றியூரில் பயங்கரம்

11/12/2025 3:22:31 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக்கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். சென்னை திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(40). இவரது மனைவி வனிதா (32). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த பூரிக்கட்டையை எடுத்து வனிதாவின் தலையில் சரமாரி அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வனிதாவுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். இதன்பிறகு வனிதாவுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 3ம் தேதி  வனிதா திடீரென உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு சென்றார். அங்கே உறவினர்கள் கேட்டபோது உடல் நலம் சரியில்லாமல் வனிதா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் திருவண்ணாமலை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘எனது மகள் வனிதாவின் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி அவரது கணவரிடம் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை போலீசார் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு  அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார், வனிதா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கட்டையில் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]