இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் முடங்கிய இ-சேவை மையங்கள்: வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை பெற முடியவில்லை

11/10/2025 3:17:21 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு ரேஷன் கார்டு, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட எந்த சான்றிதழ்களும் பெற முடியாமல் தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் எப்போது சென்றாலும், சர்வர் பழுதால் வேலை செய்ய முடியவில்லை என்று ஊழியர்கள் காரணம் கூறி, திருப்பி அனுப்புகிறார்கள். தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தும் வகையில் சென்னையில் பத்து இடங்களில் இ-சேவை மையங்கள் துவக்கி வைக்கப்படும் என்று 2013-2014ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக 24.02.2025 அன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் சென்னையில் இ-சேவை மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் இ-சேவை மையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் 486 இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை வழங்கும் சேவைகளும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான  திருமண நிதி உதவி திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.

இதையும் தவிர்த்து மக்களின் அன்றாட தேவையான திட்டங்களை இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மின்னணு ரேஷன் கார்டில் உள்ள படங்களை மாற்றம் செய்வது, பெயர் திருத்தம் மற்றும் ஆதார் கார்ட்டில் உள்ள பெயர்கள், படம், விலாசம் திருத்தம் செய்வது, வாக்காளர் அடையாள அட்டையில் புதிதாக கலர் படம் மாற்றுவது, பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இ-சேவை மையத்தில் பணம் கட்டி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக இந்த இ-சேவை மையங்களுக்கு பொதுமக்கள் எப்போது சென்றாலும், குறிப்பிட்ட சான்றிதழ்களையோ, ஆதார் அட்டையில் திருத்தம், மின்னணு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவை எதையும் பெற முடியவில்லை. சர்வர் பழுதாகியுள்ளது. பிறகு வாருங்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள்.இதனால் அரசின் சலுகை மற்றும் கல்வி கடன் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து இ-சேவை மைய ஊழியரிடம் கேட்டபோது, ``கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சர்வர் பழுதாகியுள்ளது. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட மக்கள் சேவைக்கு ஒரு நிறுவனத்தின் சர்வரை மட்டுமே சார்ந்து பணியாற்றுவதும் இதற்கு ஒரு காரணம். கூடுதல் சர்வர்களை பயன்படுத்த வேண்டும். விரைவில் நிலைமை சீராகும் என்று நினைக்கிறோம் ” என்றார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]