இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ராமஜென்ம பூமி வழக்கு தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை வழக்கில் முக்கிய தீர்ப்பு

11/10/2025 3:14:25 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

*அடுத்த 3 வேலை நாளில் வழங்க சுப்ரீம் கோர்ட் முடிவு
*மேலும் 4 முக்கிய வழக்கிலும் தீர்ப்பு வழங்குகிறது


புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், நேற்று அயோத்தி வழக்கில் இவரது அமர்வு தீர்ப்பளித்தது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் உள்ள நிலையில், தலைமை நீதிபதி அமர்வு 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிட உள்ளதால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் ேகாகாய் தலைமையிலான எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கினர். அதன்படி, இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ. 17ம் தேதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிவிட்டார். அதேசமயம், மீதமிருக்கும் இந்த ஒரு வாரத்தில், அவர் இன்னும் வேறு எந்த முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. அதாவது, நாளை (திங்கட்கிழமை - உள்ளூர் விடுமுறை), நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை - குருநானக் ஜெயந்தி) உச்சநீதிமன்ற விடுமுறை. வரும் 13, 14, 15ம் தேதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற வேலை நாட்கள். அதன்பின், 16ம் தேதி (சனிக்கிழமை விடுமுறை), 17ம் தேதி (ஞாயிறு வழக்கமான விடுமுறை). இந்த நாளுடன் தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுகிறார். அதன்பின், அடுத்த நாள் (நவ. 18) உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக 3 நாட்கள் மட்டுமே பணியாற்ற உள்ளார். அந்த நாட்களில் அவரது தலைமையிலான அமர்வு விசாரித்த சில முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதால், நாடு முழுவதும் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'சபரிமலை சீராய்வு வழக்கு'
கடந்தாண்டு செ. 28ம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், 4:1 என்ற அடிப்படையிலான தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், அந்த தீர்ப்புக்கு ஒரு சில இந்து குழுக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்புக்கு பின்னர், கிட்டத்தட்ட 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை கோகாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு அளிக்க உள்ளது.

'ரபேல் ஒப்பந்த சீராய்வு வழக்கு'
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், கடந்த ஆண்டு டிச. 14ம் தேதி வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக தனது தீர்ப்பை வழங்க உள்ளது. முன்னதாக, பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பல தரப்பினர் குற்றம் சாட்டினர். இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என்று தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியானதால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட உள்ளது.

'ராகுல்காந்தி அவமதிப்பு வழக்கு'
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார். இவ்விவகாரத்தில், ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜ எம்பி மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், லெக்கி சார்பில் ‘ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிய மனுவின் தீர்ப்பு வௌியாக உள்ளது.
 
'நிதி மசோதா செல்லுபடி வழக்கு'
நாடாளுமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவின் அரசியலமைப்பு செல்லுபடி குறித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

'தகவல் அறியும் உரிமை சட்ட வழக்கு'
இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் வர வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மற்ற பொது அதிகாரிகளைப் போலவே தலைமை நீதிபதி அலுவலகமும் உச்ச நீதிமன்றமும் தகவல்களை வெளியிடக் கடமைப்பட்டிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கும். இந்த வழக்கில் ஏப். 4ம் தேதி பெஞ்ச் தனது உத்தரவை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி



  • ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்



  • வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் போராட்டம்; சித்தராமையா, குமாரசாமி மீது வழக்கு பதிவு



  • வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்



  • வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் வைகுண்ட வாசலில் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி



  • கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி மைதானத்தில் விளையாடிய மாணவனை பாம்பு கடித்தது



  • சபரிமலை செல்ல பாதுகாப்பு தர போலீசார் மறுப்பு திருப்தி தேசாய் புனே திரும்பினார்...நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு



  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை மக்கள் ரவுன்ட் கட்டி அடித்து உதைத்தனர்: சித்தூரில் பரபரப்பு



  • 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமானது பாஜ செல்வாக்கு வேகமாக சரிவு: பல மாநிலங்களில் ஆட்சி பறிபோனது



  • மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு: 288 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]