இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அயோத்தி நில வழக்கு தீர்ப்பை முன்னிட்டு கோவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: 5,800 போலீசார் பாதுகாப்பு

11/9/2025 2:53:08 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை: அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அலர்ட் செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கோவை நகரில் இன்று காலை முதல் 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீசார் ரயில் பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்களை சோதனை செய்து அனுப்பிவருகின்றனர். காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், பதட்டம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் வின்சென்ட் ரோடு, உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, குறிச்சி, போத்தனூர், சுந்தராபுரம், செல்வபுரம், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த போலீஸ் உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]