இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அயோத்தி வழக்கின் தீர்ப்பால் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு: உபி தலைமை செயலர், டிஜிபியுடன் ரஞ்சன் கோகாய் சிறப்பு ஆலோசனை

11/8/2025 2:40:03 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், உத்திரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர், டிஜிபியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அங்கு 4500 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள்களாக விசாரித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஒருசில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அயோத்தியில் வாழும் மக்களிடையே பதற்றநிலை காணப்படுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த விவாதிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்று காலை உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் அனுப் சந்திர பாண்டே, மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) ஓம்  பிரகாஷ் சிங் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் பாதுகாப்பு முன்னேற்றபாட்டின் ஒரு பகுதியாக, ரயில்வே காவல்துறையினர் தங்களது விடுப்பை ரத்துசெய்து, 78 முக்கிய ரயில் நிலையங்களிலும் விழிப்புடன் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரபிரதேசத்தில் கூடுதலாக 4,500 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான அறிவுறுத்தல் அறிக்கையை அனுப்பி உள்ளது.

இதற்கிடையே, அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு, கோவா அரசு நேற்று சில தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் விகாஸ் எஸ்.என்.கனேகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘அயோத்தி தீர்ப்பை வழங்கியவுடன் வகுப்புவாத ஒற்றுமைக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பல்வேறு குழுக்களின் ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் இருக்க வாய்ப்புள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் சில இடங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து இருத்தல், ஊர்வலங்கள் அல்லது பேரணிகளை மேற்கொள்வது, துப்பாக்கி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்வது, ஒலிபெருக்கி பயன்படுத்துதல், கோஷங்கள் எழுப்புதல், பொது இடங்களில் பட்டாசு வெடித்தல் ஆகியன தடை செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

நவ. 13 அல்லது 15ம் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி தீர்ப்பு வழங்குவார் என்றும், அதற்கடுத்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு ஆகியவற்றிலும் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனிடையே தம் வசமுள்ள மேலும் சில முக்கியமான வழக்குகளை அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எஸ்.ஏ.போப்டேவிடம் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு



  • நக்சல் அச்சுறுத்தல் பகுதியில் பலத்த பாதுகாப்பு: ஜார்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு...இன்று 13 தொகுதிகளில் விறுவிறு



  • மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி



  • ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்



  • வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் போராட்டம்; சித்தராமையா, குமாரசாமி மீது வழக்கு பதிவு



  • வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்



  • வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் வைகுண்ட வாசலில் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி



  • கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி மைதானத்தில் விளையாடிய மாணவனை பாம்பு கடித்தது



  • சபரிமலை செல்ல பாதுகாப்பு தர போலீசார் மறுப்பு திருப்தி தேசாய் புனே திரும்பினார்...நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு



  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை மக்கள் ரவுன்ட் கட்டி அடித்து உதைத்தனர்: சித்தூரில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]