இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குறித்த காலத்தில் வளர்ச்சி பணிகளை செய்யாவிட்டால் கோயில் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் எச்சரிக்கை

11/7/2025 4:42:16 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், செயலாளர் அசோக் டோங்ரே, கமிஷனர் பணீந்திரரெட்டி,  கூடுதல் ஆணையர்கள் வான்மதி, லட்சுமணன், திருமகள், இணை ஆணையர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது: கோயில்களுக்கான திருப்பணிகள் குறித்து பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் கோரிக்கைகள் அடிப்படையில் திருப்பணி செய்யப்பட வேண்டிய கோயில்களுக்கு விரைவாக பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற  வேண்டும்.

கோயில்களுக்கு சொந்தமாக திருமண மண்டபங்கள் கட்டும் பணி, திருத்தேர் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் அலுவலர்கள் கண்காணித்து  பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உள்ள  விலைமதிப்பற்ற சிலைகள் மற்றும் ஆபரணங்களைப் பாதுகாத்திட களவு எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதேபோல் தீ தடுப்பு  உபகரணங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பதுடன் அவற்றிலிருந்து பெறும் வருவாயை உறுதி செய்யவும், நிலுவையில் உள்ள வரிகள் மற்றும் குத்தகை வசூல்  செய்திடவும் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் டோங்ரே பேசுகையில், ‘கோயில்களுக்கான வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில்  நிறைவேற்ற தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]