இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை அமெரிக்கா பயணம்

11/7/2025 4:29:46 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் 17ம் தேதி வரை அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அங்கு, தமிழ்நாட்டிற்கான புதிய  திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கிறார். வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்ந்த  திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். சிகாகோ நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தல், சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, வட்ட மேசை  கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனால், நாளை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் செல்கிறார். 9ம் தேதி மாலை சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 10ம் தேதி வட்டமேசை  கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். அப்போது, பன்னீர்செல்வத்துக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

12ம் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.  மேலும் 13ம் தேதி வாஷிங்டன் டிசி செல்கிறார். 14ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள்  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார். 15ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நன்கொடையாளர் அமர்வை தொடங்கி வைக்கிறார். 16ம் தேதி நியூயார்க் சென்று தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 17ம்  தேதி தமிழகம் திரும்புகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் உடன் செல்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]