இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இரிடியம் தருவதாக மோசடி 5 பேர் கும்பல் அதிரடி கைது: ரூ59 லட்சம் பறிமுதல்

11/7/2025 4:01:53 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

திருப்பதி: விண்வெளி ஆராய்ச்சிக்கு தொடர்புள்ள அதிக மதிப்புள்ள இரிடியம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம், மெகபூப் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரரெட்டி. இவர் தனது ரூ40 லட்சத்தை ஒரு கும்பல் பறித்துச் சென்றதாக திருப்பதி அலிபிரி போலீசில் புகார் அளித்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த ரவிகிஷோர் என்பவரும் தனக்கு சக்தி வாய்ந்த இரிடியம் அளிப்பதாக கூறி ஒரு கும்பல் ரூ19 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இப்புகார்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தொடர்புடையவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட்டராமன்(60), முகேஷ்(28), சித்தூர் மாவட்டம் சித்தப்பா(41), பெங்களூருவைச் சேர்ந்த சுனில் (43), சிராலா பகுதியை சேர்ந்த பிரசாத்(34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து  போலீசார் நேற்று அவர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருப்பதி எஸ்பி கஜராவ்பூபால் கூறியதாவது: கைதான கும்பல் வசதியானவர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவர்கள்,  தங்களிடம் சக்தி வாய்ந்த இரிடியம் உள்ளது.   இது காந்த சக்தி கொண்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய  பங்கு வகிப்பது. இதற்கு உள்நாடு, வெளிநாடுகளில் அதிக மதிப்பு உள்ளதாக கூறி அவர்களை நம்ப வைத்துள்ளனர். இதை நம்பி பலர் லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்துள்ளனர். இதேபோல் இவர்கள் மேலும் பலரிடம் கோடிக்கணக்கில்  மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

மேலும் சில
  • நடிகர்கள் வெங்கடேஷ், ராணா, நானி வீட்டில் வருமான வரி சோதனை: ஸ்டுடியோ, பட தயாரிப்பாளர் அலுவலகங்களிலும் அதிகாரிகள் அதிரடி



  • சிறுமிகள் கடத்தல், அடைத்து வைத்தல் பிரிவுகளில் வழக்கு நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட்: ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது



  • ரஸ்க்கில் இரும்பு போல்ட்



  • ஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்



  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 102வது பிறந்தநாள்: சோனியா உட்பட தலைவர்கள் மரியாதை



  • சபரிமலையில் தரிசனம் செய்ய தமிழக இளம் பெண்கள் 139 பேர் ஆன்லைனில் முன்பதிவு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று பயணம்



  • ‘கார்டோசாட்-3’ செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் 25ல் விண்ணில் பாய்கிறது



  • காஷ்மீர், ஜேஎன்யு விவகாரம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு



  • காவல் நிலையத்தில் போலீசாரை விரட்டி விரட்டி தாக்கிய இளம்பெண்: போதையில் பயங்கர ரகளை



  • கேரளாவில் இன்று முதல் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.130



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]