இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க சதி: கி.வீரமணி பேட்டி

11/7/2025 3:56:18 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

தஞ்சை: எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க சதி நடந்து வருவதாக திக தலைவர் கி.வீரமணி கூறினார். தஞ்சை பிள்ளையார்பட்டியில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திக தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை தேவையற்ற  கலவர பூமியாக மாற்ற வேண்டும். அதன்மூலமாக வருகிற உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சிகள் மீது பழிசுமத்தி அவர்களை சிறை வைக்க வேண்டும். அதன்பிறகு எளிதில் தேர்தலை நடத்தி விடலாம் என தப்பு கணக்கு போடுகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அடக்கத்தோடு அமைதியை காக்க வேண்டியவர்கள் அமைதியை குலைப்பதற்கு துணை போகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவம் நடந்த பிறகு பாஜ, ஆர்எஸ்எஸ் தலைமை இதை கண்டித்திருக்க வேண்டும்.  தமிழக முதல்வர் இதை கண்டித்திருக்க வேண்டும். வாய்மூடி மவுனியாக இருக்க கூடாது. ஒரு பாஜ தலைவர் கேட்கிறார் திருவள்ளுவர் என்ன திமுகவுக்கு சொந்தமா என்று. திமுக எந்த காலத்திலும் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் திராவிட இயக்கம் இல்லை என்றால்  திருவள்ளுவர் யார் என உலகுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]