இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

டேவிஸ் கோப்பை போட்டிகள் இடமாற்றம்: ‘தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’..பாக். டென்னிஸ் கழக தலைவர் காட்டம்

11/7/2025 3:51:28 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

இஸ்லாமாபாத்: ‘ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் மற்றும் சர்வதேச டென்னிஸ் கழக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’ என்று பாகிஸ்தான் டென்னிஸ் கழக தலைவர் சலீம் சைஃபுல்லா குற்றம்சாட்டியுள்ளார். இம்மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா-ஓசியானா தகுதி சுற்று போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தன. ஆனால் பாதுகாப்பு  இல்லை என்று கூறி, பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இந்திய டென்னிஸ் வீரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து சர்வதேச டென்னிஸ் கழகத்துக்கு, ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கடிதம் எழுதினர்.  அதில், ‘போட்டி நடைபெறும் இடத்தை பாகிஸ்தானுக்கு வெளியே, வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு மாற்ற வேண்டும்‘ என கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சர்வதேச டென்னிஸ் கழகம், ‘வீரர்களின் பாதுகாப்பே முதன்மையானது. அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. எனவே இரு நாடுகளுக்கும் பொதுவான நடுநிலையான ஒரு நாட்டில் இந்த போட்டிகள்  நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் கழகத்தின் இந்த முடிவை எதிர்த்து அப்பீல் செய்வோம் என பாக்.டென்னிஸ் கழகத்தின் தலைவர் சலீம் சைஃபுல்லா நேற்று அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், ‘‘டென்னிஸ் போட்டிகளை இடம் மாற்றுவது துரதிருஷ்டமான முடிவு. இது தொடர்பாக இன்று பாக். டென்னிஸ் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சர்வதேச டென்னிஸ் கழகம் தங்களது  இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை. போர் நடைபெறவில்லை. இயற்கை பேரழிவு எதுவும் நடைபெறவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாகிஸ்தான் வந்து செல்கின்றனர். ஆனால்  டென்னிஸ் வீரர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் பாதுகாப்பான நாடாக தெரியவில்லை. இது மிகப்பெரிய ஜோக். இந்த விஷயத்தில் இந்திய டென்னிஸ் அசோஷியேஷன் மற்றும் சர்வதேச டென்னிஸ் கழக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர் என்றே நான் சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை, பாகிஸ்தான் தங்கள் நாட்டில் புல்தரை மைதானத்தில் நடத்துவதாக இருந்தது. தற்போது வேறு நாட்டில் கடினமான களிமண் தரை மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள்  அதிகம் என்பதால், அது குறித்த கவலையும் அந்நாட்டு டென்னிஸ் கழக நிர்வாகிகளுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

55 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்திய டென்னிஸ் வீரர்கள் கடைசியாக டேவிஸ் கோப்பை தகுதி சுற்றில் கடந்த 1964ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடினர். அதன் பின்னர் கடந்த 55 ஆண்டுகளாக இந்திய டென்னிஸ் வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடவே இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது. 1964ம் ஆண்டு லாகூரில் நடந்த அப்போட்டியில் இந்திய வீரர்கள் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். டேவிஸ் கோப்பையில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் மோதின. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் சில
  • ‘இரண்டு சந்தோஷமான தருணங்கள்’.....தோனி நெகிழ்ச்சி பேட்டி



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் இடமில்லை மிடில் ஸ்டெம்பை உடைத்தால் ‘கம்பேக்’ கொடுப்பார்களா?: புகைப்படம் வெளியிட்டு சிக்னல் தரும் பும்ரா



  • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்



  • நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்



  • தோனி விளையாட வருவாரா? மாட்டாரா? ரெண்டும் கெட்டான் நிலையில் பிசிசிஐ...2020 மார்ச் வரை காத்திருக்க வேணுமாம்



  • மல்யுத்த வீரர், வீராங்கனையின் காதல் ஒலிம்பிக் முடிஞ்சிதான் கல்யாணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததால் சந்தோசம்



  • வங்கதேசத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுடன் மோதல் டிச. 15ம் தேதி சென்னையில் ‘ஒன்டே’...டி20 போட்டி ஐதராபாத்தில் தொடக்கம்



  • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தீபிகா - அடானு ஜோடி வெண்கலம்



  • 15 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: கூடைப்பந்து பயிற்சியாளர் கைது...மிச்சிகன் மாநில காவல்துறை அதிரடி



  • வீரர்கள் தேர்வுக் குழுவில் குறைபாடு கங்குலி இதனை சரிசெய்வாரா?: ஹர்பஜன் சிங் ட்விட்டில் ஆதங்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]