இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு அயோத்தியில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் தயார்

11/7/2025 3:16:13 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உத்திரப்பிரதேசத்தில் தற்காலிகமாக 8 சிறைச்சாலைகளை அம்மாநில அரசு அமைத்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நவம்பர் 4 ம் தேதி முதல் தொடர்ந்து 10 வேலை நாட்களில் முக்கியமான 5  வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், அதில் அயோத்தி வழக்கும் ஒன்று எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 14 ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் வருகிற 13ம்  தேதிக்கு முன்னதாக அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ்  குவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இந்த தற்காலிக சிறைச்சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளன. பதற்ற நிலையை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உ.பி., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



  • இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது



  • பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது



  • கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]