இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போராட்டத்தில் பங்கேற்றவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்...வக்கீல்களுக்கு எதிராக 2 எப்ஐஆர் பதிவு

11/6/2025 4:57:11 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

புதுடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 2 போலீசார் கொடுத்த புகாரின்படி வழக்கறிஞர்களுக்கு எதிராக 2 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2ம் தேதி போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 14  இருசக்கர வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், 21 போலீசாரும், 8 வழக்கறிஞர்களும் காயம் அடைந்தனர்.  போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து டெல்லி காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினர் அவர்களது  குடும்பத்தினருடன் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

டெல்லி போலீசாருக்கு ஆதரவாக, போலீசாரின் குடும்பத்தினரும் இந்தியா கேட் பகுதியில் பேரணி நடத்தினர். சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக  நீடித்த இந்த போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவியது. ‘கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாய்  இழப்பீடு வழங்கப்படும்’ என்று காவல்துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.  இந்நிலையில், சம்பவ நாளன்று பைக்கில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் கரண், தன்னை சில வழக்கறிஞர்கள் மடக்கி தாக்கியதாக கூறப்பட்ட  புகாரின் அடிப்படையில் நேற்று ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறைக் கைதிகளை ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் ரவி பிரகாஷ்,  தன்னை சில வழக்கறிஞர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றொரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்களால் கூறப்படும் தாக்குதல் தொடர்பான மூன்று புகார்களை, காவல்துறை தரப்பில் இன்னும் எப்ஐஆர்  பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய  காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வருண் தாக்கூர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘போலீசாரின் போராட்டம் சட்ட விரோதமானது; பொறுப்பற்றது. ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஆபத்தானது. எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும்  பங்கேற்க போலீசுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தங்களது சொந்த கோரிக்கைகளுக்காக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கின்றனர்.

நாள்  முழுவதும் பொது இடங்களில் இதுபோன்ற சட்டவிரோத போராட்டம் நடந்தது. அதிகாரிகளின் பொறுப்பற்ற நடத்தையால், சமூகத்தில் அச்சத்தை  ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், போராட்டத்தில் பங்கேற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]