இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பட்டாபிராமில் குடிபோதை தகராறு வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 3 பேர் கைது

11/6/2025 4:38:51 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

பட்டாபிராம்: பட்டாபிராமில் குடிபோதையில் தகராறில் ஒரு வாலிபரை சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து  வருகின்றனர். ஆவடி அருகே  பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (21). இவர் கிளிக்கூண்டு தயாரித்து  விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டுசேரி மேம்பாலம் அருகே தனது நண்பர்களுடன் நின்று  பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர், முரளியிடம் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம்  முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அக்கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் முரளி கை, கால், கழுத்து மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும்  3 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது. படுகாயம் அடைந்த முரளியை நண்பர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முரளியின் தலையில் 10 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர்  விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், முரளியை கொல்ல முயன்றது பட்டாபிராம்,  வள்ளலார் நகர் முதல் தெரு சேர்ந்த மகேஷ்குமார் (21), அப்பு (21), அம்பத்தூர், வெங்கடாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரண் (23)  ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து பட்டாபிராம் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை  திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • திருப்போரூர் அருகே ரூ.1.93 லட்சம் கொள்ளையில் 2 பேர் அதிரடி கைது: விருத்தாசலத்தில் சுற்றி வளைப்பு



  • குடிபோதையில் வீண் தகராறுரவுடிக்கு சரமாரி கத்திக் குத்து



  • ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை: சின்ன மாமியார் உட்பட 2 பேர் கைது



  • நொளம்பூரில் பரபரப்பு தம்பதி வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த 2 பேர் போலீசில் சரண்



  • சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது: நைஜீரிய வாலிபருக்கு வலைவீச்சு



  • போலி தங்க பிஸ்கெட் கொடுத்து வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி: பெண் கைது



  • தஞ்சை பெண் ஊழியர், க.காதலன் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்



  • மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பொன்னேரியில் கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவர் கைது



  • அம்பத்தூரில் பங்குத் தந்தை வீட்டில் நகை, பணம் திருட்டு



  • திருவள்ளூரில் மின்சார வாரிய அலுவலரை மிரட்டிய போலி நிருபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]