இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வில்லிவாக்கத்தில் செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிய வாலிபர் மரத்தில் மோதி பலி

11/6/2025 3:57:28 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் செல்போனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டி சென்ற வாலிபர் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சக்திவேல்(19). மீன்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் யோவான்(20). இவர் கூலி  வேலை செய்து வருகிறார். அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேந்தர்(20). மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.  இவர்கள் மூவரும் நேற்று நள்ளிரவு  சென்னை கொளத்தூர் பகுதியில் நண்பருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு  திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஒரே பைக்கில்  மூவரும் வில்லிவாக்கம் தாதா குப்பம் 200 அடி சாலையில் பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். சக்திவேல் செல்போன் பேசிக் கொண்டே பைக்  ஓட்டி வந்துள்ளார். அப்போது பைக்  நிலைதடுமாறி வழுக்கி விழுந்ததில் பைக்  பிளாட்பாரத்தின் மீது ஏறி மரத்தில் மோதியதில் சக்திவேல் தலையில்  பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்,  பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த யோவான், சுரேந்தருக்கு பலத்த காயம்  ஏற்பட்டது.  

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போக்குவரத்து  இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் உதவி ஆய்வாளர் கலைமணி தலைமையில் வந்த போலீசார், சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த யோவான், சுரேந்தைர 108 ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]