இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாதேவர் கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை மீது அமர்ந்திருந்த பாகன் மின்கம்பத்தில் மோதி பரிதாப சாவு

11/6/2025 3:53:34 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

திருவனந்தபுரம்: கோயில் திருவிழாவின்போது மிரண்டு ஓடிய யானை மீது அமர்ந்து இருந்த பாகன் மின் கம்பத்தில் மோதி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் கோட்டயம் திருநக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலில் சிவன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் 2வது  பாகனாக திருவனந்தபுரத்தை சேர்ந்த விக்ரமன் (24) பணியாற்றி வந்தார். இவருக்கு வரும் சனிக்கிழமை நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.  நேற்று மாலை திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஐப்பசி திருவிழா நிறைவையொட்டி ஆறாட்டு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் யானை மீது  சாமி வீதி உலா நடந்தபோது யானை மீது பாகன் விக்ரமன் அமர்ந்து இருந்தார். திடீரென யானை மிரண்டு ஓடியது. அங்கு திரண்டு இருந்த பக்தர்கள்  அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோட்டயம்-குமரகம் ரோட்டில் ஓடிய யானை அந்த வழியாக வந்த பஸ்சை முட்டி தள்ளியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தது. யானை மீது  அமர்ந்து இருந்த பாகன் விக்ரமன் யானைைய கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் யானை கட்டுப்படாமல் மேலும் வேகமாக ஓடி ஒரு  குறுகலான தெரு வழியாக சென்றது. அப்போது அங்கிருந்து மின் கம்பத்தில் யானை மோதியது. இதில் யானை மீது அமர்ந்து இருந்த விக்ரமனின்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதன்பிறகு விக்ரமனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக  இறந்தார். திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பாகன் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி



  • ராய்காட் நகரை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு; ‘மதச்சார்பின்மை’ என்றால் என்ன? மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்



  • வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் போராட்டம்; சித்தராமையா, குமாரசாமி மீது வழக்கு பதிவு



  • வாட்ஸ்அப் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்கள் பட்டியல் கிடைக்கவில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்



  • வைகுண்ட ஏகாதசி, துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் வைகுண்ட வாசலில் 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க அனுமதி



  • கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி மைதானத்தில் விளையாடிய மாணவனை பாம்பு கடித்தது



  • சபரிமலை செல்ல பாதுகாப்பு தர போலீசார் மறுப்பு திருப்தி தேசாய் புனே திரும்பினார்...நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு



  • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை மக்கள் ரவுன்ட் கட்டி அடித்து உதைத்தனர்: சித்தூரில் பரபரப்பு



  • 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமானது பாஜ செல்வாக்கு வேகமாக சரிவு: பல மாநிலங்களில் ஆட்சி பறிபோனது



  • மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு: 288 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]