இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

முதல்வருக்கு தெரியாமல் புதுச்சேரி ராஜ்நிவாசுக்கு மாறுவேடத்தில் வரும் அமைச்சர்கள்: கிரண்பேடி தகவல்

11/6/2025 2:37:29 PM
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

புதுச்சேரி: முதல்வருக்கு தெரியாமல் ராஜ்நிவாசுக்கு மாறு வேடத்தில் அமைச்சர்கள் வருவதாக அம்மாநில கவர்னர் கிரண்பேடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் பேட்டி அளித்தபோது, ‘’கவர்னர் அன்றாட அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. முதல்வர், அமைச்சர்கள் உத்தரவின்படி தலைமை செயலர், அரசு செயலர்கள் செயல்பட வேண்டும். கவர்னர் உத்தரவை செயல்படுத்த கூடாது. அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போட கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.

நீதிமன்ற உத்தரவை மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு, முன் இது தொடர்பாக கவர்னருக்கு கடிதம் அவருக்கு அனுப்பியிருக்கிறேன்’ என்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு கவர்னர் கிரண்பேடி, முதல்வருக்கு பதில் கேள்வி எழுப்பி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: உண்மையில் விதிகள் இருவருக்கும் பொருந்தும். மோசமான மொழியிலும் கேவலமான சுவரொட்டிகள் மற்றும் பொய்களும் இவ்விதிகளின் ஒருபகுதியாக இல்லை. யார் இதை செய்கிறார்கள்? ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாசில் நடைபெறும் நிகழ்வுகளுக்கோ, சந்திப்புகளுக்காகவோ அமைச்சர்கள் வர விரும்பும்போது கூட பின்னணியில் இருந்து தடுப்பவர்கள் யார்? இரவில் ஸ்கூட்டரில் அமைச்சர்கள் தங்களை மறைத்து கொண்டு வந்து தாங்கள் வந்ததை தெரியப்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.

இது என்ன விதிகள் என்று கேள்வி எழுகிறது. குறைகளை நிவர்த்தி செய்யவும், மக்களுக்கு நிவாரணம் தரவும், தகவல் தொடர்பு சாதனங்களை ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று அதிகாரிகளை வழிநடத்துகிறார்கள் என்று முதல்வருக்கு கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வருக்கு தெரியாமல் அமைச்சர்கள் ராஜ்நிவாஸ் சென்று வருவதாக கவர்னர் பகிரங்கமாக கூறியிருப்பது, புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • கொரோனா மொத்த பாதிப்பில் 50 சதவீதம் பதிவு: கேரளாவில் 3வது அலை தொடங்கியதா?: ஒன்றிய நிபுணர்கள் குழு விரைந்தது



  • செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: எதிர்கட்சி தலைவர்கள்அவசர ஆலோசனை



  • கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்: தலைவர்கள் வாழ்த்து



  • எடியூரப்பா ராஜினாமா எதிரொலி; புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு: மேலிட பார்வையாளர்கள் இன்று மாலை பெங்களூரு வருகை



  • டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு



  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]