இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆன்லைன் விற்பனையும் கண்காணிப்பு மாஞ்சா நூல் காற்றாடி விட்டால் குண்டர் சட்டம் பாயும்...சென்னை போலீஸ் எச்சரிக்கை

11/5/2025 3:28:50 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால். ேநற்று முன்தினம் மாலை தனது இரண்டு வயது மகன் அபினேஷ் ராவ் மற்றும் மனைவி  சுமித்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை பாரதி நகர் மேம்பாலத்தின் மேல் பைக்கில் செல்லும் போது காற்றில் பறந்து  வந்த காற்றாடி மாஞ்சா நூல் சுமித்ராவுடன் அமர்ந்து வந்த அபினேஷ் ராவ் கழுத்தில் சிக்கி அறுத்தது. அதில் குழந்தையின் கழுத்து அறுத்து ரத்தம்  கொட்டி துடிக்க துடிக்க உயிரிழந்தான். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சம்பவ இடத்தை வண்ணாரப்பேட்டை இணை  கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை காவல் துறையால் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தாலும், மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலும் அவர்கள் மீது  குண்டர் சட்டம் பாயும். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்ணாடிகள், வஜ்ரம் போன்ற பொருட்களை  வைத்து தயாரிக்கப்படுவதே மாஞ்சா நூல். ஆன்லைனில் மாஞ்சா என்ற பெயரை பயன்படுத்தி நூல்கள் விற்கப்படுகிறது. ஆன்லைனில் சட்ட  விரோதமாக மாஞ்சா நூல் விற்கப்படுகிறது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னை முழுவதும் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுகிறதா  என சோதனை நடத்த 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த தனிப்படைகள் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் யாரேனும் தயார் செய்கிறார்களா,  விற்பனை செய்கிறார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 50 பட்டம், 5 மாஞ்சா நூல் உருண்டை பறிமுதல் சென்னையில் போலீசாரின் தடையை மீறி  வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி தெரு, தண்டையார் பேட்டை இளைய முதலி தெரு, வ.உ.சி.  நகர், காசிமேடு, ராயபுரம், கொருக்குபேட்டை பாரதி நகர், திருவொற்றியூர் என வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனைக்கு பெயர் பெற்ற இடம். இந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மாஞ்சா நூல் கேட்டாலும் மறைமுகமாக கிடைக்கும். போலீசார் பல வகையில் தடுத்தாலும் மாஞ்சா நூல்  விற்பனையை தடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் குடிசை தொழிலாக மாஞ்சா நூல் தயாரிக்கப்படுகிறது.

  அந்த வகையில் நேற்று  வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர்  ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி,  தண்டையார் பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ராயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்டோர் கொண்ட 15 தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகள் ேநற்று நடத்திய அதிரடி சோதனையில், கடைகள் மற்றும் குடிசைகளில் ரகசியமாக விற்பனை செய்த 50  பட்டம் மற்றும் 5 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தடையை மீறி விற்பனை செய்த நபர்கள் உதவியுடன் தனிப்படை  போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம்



  • மழையால் 7 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை: கடலோர மாவட்டங்களில் சூறாவளி வீசும்...காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பால் மழை கொட்டும்



  • குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற புதிய திட்டம் ரூ.486 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: கோயம்பேட்டில் முதல்வர் திறந்து வைத்தார்



  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]