இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மகள்கள் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்தை மீட்டுத்தர வேண்டும்: மன்றாடுகிறார் மூதாட்டி

11/5/2025 3:24:18 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

விழுப்புரம்: மகள்கள் ஏமாற்றி எழுதிவாங்கிய சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்துள்ளார்.விழுப்புரம் வி.மருதூர் குப்புசாமி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரோஜினி(87). இவர் கலெக்டர் சுப்ரமணியனிடம் கொடுத்துள்ள மனுவில்  கூறியிருப்பதாவது:கணவன் 1949ல் சுயமாக சம்பாதித்து வாங்கிய காலிமனையில் வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள். அனைவருக்கும்  திருமணம் செய்து கொடுத்து நல்லநிலையில் உள்ளனர். மூத்த மகள் இறந்துவிட்டார். எனக்கு புற்றுநோய் ஏற்பட்டு அறுவைசிகிச்சை  செய்துகொண்டேன். உடல்நிலையை கருத்தில்கொண்டு எனது கணவன் பெயரில் உள்ள சொத்தை எனது பெயருக்கு தான செட்டில்மெண்ட்  செய்துகொடுத்து, பிற்காலத்தில் மூன்று பிள்ளைகளுக்கு கொடுத்துவிடு என வாய்மொழியாக கூறினார்.

இதன்பிறகு என் கணவரும் 2008ம் வருடம் இறந்துவிட்டார். அவர் மறைவுக்கு பின் 3 பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்கும்படி கூறினார். பிள்ளைகளுக்கு  சிரமம் கொடுக்கக்கூடாது என்பதால் கணவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.  தனிமையில் இருப்பதை பயன்படுத்தி எனது மூத்த மகனின் மகள் சுமதி, என்னிடம் வந்து கடைசி வரை பார்த்துக்கொள்கிறேன், நானும் விதவை  என்று கூறி, அப்பாவிற்கு சேரவேண்டிய சொத்திற்கான பங்கை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்ததும்  தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

 2வது மகள் பத்மாவதியும் 2012ல் சுமதியை போலவே சொத்தில் மற்றொரு பங்கை ஏமாற்றி என்னை  தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.தன்னை ஏமாற்றி மோசடியாக எழுதிவாங்கிய சொத்தை சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்து எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மூத்த  குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நலச்சட்டத்தின்படி தானமாக எழுதிக்கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்துசெய்ய மாவட்ட வருவாய்  அலுவலருக்கு முழு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார். இம்மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]