இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் ஆபீசில் 2வது நாளாக லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.31.83 லட்சம் பறிமுதல்

11/5/2025 3:22:40 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

ஈரோடு: ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2வது நாளாக சோதனை நடத்தினர்.ஈரோடு பவானி மெயின் ரோடு லட்சுமி தியேட்டர் பகுதியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி  வருகிறது. இங்கு பணியாற்றி வரும் அலுவலர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு  போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருணாகரன் தலைமையிலான போலீசார்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை  கைப்பற்றி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரத்து 365 கைப்பற்றினர். இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும், லஞ்ச  பணமாக பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இரவு 8 மணிக்கு பிறகு அங்கிருந்த பெண் ஊழியர்களை மட்டும் அனுப்பி  வைத்தனர். அங்கிருந்த மற்ற ஊழியர்களிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர். இன்று 2வது நாளாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களை உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். பல்வேறு கூட்டுறவு சங்க  அலுவலர்களிடம் இருந்து பணம் பெற்றது முகாந்திரம் உள்ளதால் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் மட்டுமின்றி அசோகபுரம் அய்யன்காடு பகுதியில் உள்ள ஈரோடு கூட்டுறவு தீவிர  கைத்தறி வளர்ச்சி திட்ட அலுவலகத்திலும், சூளையில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்திலும் தனிக்குழுவாக நேற்று லஞ்ச ஒழிப்பு  போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் தரன் சென்னையில் இன்று  நடைபெறவுள்ள ஆய்வு கூட்டத்திற்காக சென்று விட்டார். கணக்கில் வராத பணம் லஞ்ச பணமாக உள்ளதால், இதில் தொடர்புடையவர்கள் கைது  செய்யப்படுவார்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]