இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

டேவிஸ் கோப்பை நடத்துவதில் தொடரும் சிக்கல் பொதுவான இடத்தை தேர்வு பண்ணுங்க: பாகிஸ்தானுக்கு ஐ.டி.எஃப் கடிதம்

11/5/2025 3:19:48 PM
8 ஆண்டுகளாக நலிந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தவில்லை: பாரபட்சம் காட்டும் தமிழக அரசு கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம்: பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கடந்த செப். 14 மற்றும் 15ம் தேதிகளில், இந்திய அணி பாகிஸ்தான் சென்று அந்நாட்டின் தலைநகர்  இஸ்லாமாபாத்தில் விளையாட திட்டமிடப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான நிலை நீடிப்பதால்  கிரிக்கெட் உள்பட எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் உள்ளன. அதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட டென்னிஸ் தொடரும் குறிப்பிட்ட  ேததியில் நடைபெறவில்லை. ஆனால், டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்திய வீரர்கள் பங்கேற்பது குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தது.  கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தது.

 லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 4-0 என்ற  கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் பாதுகாப்பு ஆலோசகர்களின்  ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்ேபாது, ‘இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் டேவிஸ் கோப்பை போட்டியை,  பொதுவான நாட்டில் விளையாட வேண்டும்’ என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தரப்பில் கருத்துகள் கூறப்பட்டன. அதன்தொடர்ச்சியாக போட்டி  வரும் 29, 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, சர்வதேச ெடன்னிஸ் சங்கம் (ஐடிஎஃப்) தரப்பில் தற்போது ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘டேவிஸ் கோப்பை  விதிமுறைகளின்படி, பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு இப்போது ஒரு பொதுவான இடத்தை பரிந்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும்  அவர்களால் முன்மொழியப்பட்ட இடத்தை உறுதிப்படுத்த 5 வேலை நாட்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’  என்று தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • நாளை மறுநாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ‘பிங்கு - டிங்கு’ 67,000 டிக்கெட்டும் வித்தாச்சு...மண்ணின் மைந்தன் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி



  • 5 போட்டிகளில் 3 டிரா, 2 தோல்வி: ஃபிபா தகுதியை இழந்தது இந்தியா



  • புரோ வாலிபால் இனி ஐவிஎல்



  • ஆட்டம் தொடங்கும் சில மணிநேரம் முன் ஆஸி. அணியின் ‘லைன் அப்’ லீக்: வீராங்கனைக்கு ஓராண்டு ஆட தடை



  • ‘பளார்’ விட்ட வீரர் சஸ்பெண்ட்



  • சையத் முஷ்டாக் அலி டி20: முரளி விஜய்க்கு கணுக்காலில் காயம்.. திடீர் விலகலால் பின்னடைவு



  • கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 சாய்னா நேவால் திடீர் விலகல்: சையத் மோடி போட்டியில் தீவிர பயிற்சி



  • பாகிஸ்தான் அணியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி கேப்டன் சர்ப்ராஸ் ‘கம்பேக்’.. பிரதமர் இம்ரான் கான் ஆதரவால் வாய்ப்பு



  • 22ம் தேதி இந்தியா - வங்கதேச பகல் இரவு டெஸ்ட்: உம் மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு: ‘பிங்க்’ பந்து குறித்து புஜாரா ட்விட்



  • மார்ஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சகோதரனின் மூக்குடைத்த பேட்ஸ்மேன்: எதிரெதிர் அணியில் ஆடியதில் விநோதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]