இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அந்தமான் அருகே காற்றழுத்தம் புயலாகும் 2 நாட்களில் மழை பெய்யும்

11/5/2025 3:16:03 PM
உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி அரசு: இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு...உத்தவ் தாக்கரே அரசுக்கு 162 உறுப்பினர்கள் ஆதரவு

சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் புயலாக மாறும் பட்சத்தில் 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த மகா புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக்கடல் நிலை கொண்டுள்ளது. நேற்று இரவு  11.30 மணியளவில் குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையிலிருந்து தென்மேற்கு திசையில் 670 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலை கொண்டிருந்தது.  மகா வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதனால், அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயல் குஜராத்தில்  கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இந்த புயல் காரணமாக அரபிக் கடல் பகுதியை ஒட்டிய கடலோரப் பகுதியில் உள்ள ஈரப்பதம் முற்றிலுமாக  உறிஞ்சப்பட்டது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெயில் அதிகமாக பதிவாகவில்லை. நேற்றைய அதிகபட்ச வெயில்  93.5 டிகிரி பாரன்ஹீட் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவானது.  அடுத்த இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழையால் ஒரிரு இடங்களில் லோசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தமானை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல்பகுதியில் புதியதாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

அது  மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் அந்த  புயல் வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புவனேஸ்வர் அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெறும் போது வட  கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி,  அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அந்தமான் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்  பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்தபடி உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அறிவிப்பா?...அடுத்தடுத்து வழக்குகள் விசாரணைக்கு வருவதால் அட்டவணை வெளியாவதில் சந்தேகம்



  • மழையால் 7 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை: கடலோர மாவட்டங்களில் சூறாவளி வீசும்...காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பால் மழை கொட்டும்



  • குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற புதிய திட்டம் ரூ.486 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: கோயம்பேட்டில் முதல்வர் திறந்து வைத்தார்



  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]