இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வடமாநிலங்களில் காற்று மாசு எதிரொலி: 15 ஆண்டாக ஓட்டிய அரசு வாகனத்துக்கு தடை...பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு

11/5/2025 3:12:31 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

பாட்னா: தீபாவளிக்குப் பின்னர் டெல்லி, வடமாநிலங்களில் காற்றின் தரம்  மோசமடைந்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் மூச்சு   திணறல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக  டெல்லி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரியானா மற்றும்   பஞ்சாபில் மேற்கொள்ளப்படும் விவசாய கழிவு எரிப்பு, காற்று மாசுபாட்டிற்கு  முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி   அரசாங்கம் நேற்று முதல் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநிலத்தில்  ஒற்றை, இரட்டை இலக்க எண் வாகன திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், மாநிலத்தில் காற்றில் மாசு கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்  உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தலைமை செயலாளர் தீபக் குமார் கூறியதாவது:  பீகார் மாநிலத்தில் காற்று மாசுவினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, 15 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட அரசு, வணிக வாகனங்களை தடை  விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பாட்னா மற்றும் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் இன்று (நவ. 5) முதல் அமுல்படுத்தப்படும். அதாவது, இனி 15  ஆண்டு வயதுடைய வணிக மற்றும் அரசு வாகனங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக போக்குவரத்துத்  துறை சார்பில், சிறப்பு இயக்கம் தொடங்கப்படும். அப்போது 15 ஆண்டுகள் வரை இயக்கப்பட்ட வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
குறிப்பிட்ட 15 ஆண்டுக்கு மேல் தொடர்ந்து இயங்கும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே, 15  ஆண்டுகள் ஓடிய தனியார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மீண்டும் மாசு கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்த  வேண்டியிருக்கும். புகையில் இருந்து மாசுபடுவதைக் குறைப்பதை வலியுறுத்தும் வகையில்,  வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு விவசாய  மானியம் அளிக்கப்படாது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



  • இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது



  • பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது



  • கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]