ஐ.எஸ்.எல். கால்பந்து ஜாம்ஷெட்பூர் - பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
11/4/2025 3:41:10 PM
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், 6வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி.- பெங்களூரு எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) ‘டிரா’வில் முடிந்தது. பெங்களூரு வீரர்கள் இலக்கை நோக்கி அடித்த 9 ஷாட்டுகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தி அபாரமாக ஆடினார். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் ‘டிரா’ தான் கண்டுள்ளது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். வருகிற 6ம் தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.