இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் அதிநவீன சொகுசு வீடியோ கோச் பஸ்கள் இயக்க திட்டம்

11/4/2025 3:22:47 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய 100 பஸ்களை ₹19.50 கோடி செலவில் தயாரிக்க, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இதன்வாயிலாக தினசரி நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் நீண்ட தூர போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறது. நாள்தோறும் 251 வழித்தடங்களில்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டும் அல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு பஸ்கள்  செல்கின்றன.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மிகவும் பழையது. இதனால் மழைகாலத்தில் தண்ணீர் உள்ளே  வருவது, சீட்டுகள் உடைந்து காணப்படுவது போன்ற பிரச்னைகள் இருந்து வந்தது. மேலும் ஓடும் பஸ் ரிப்பேராகி நிற்பது போன்றவை தினமும்  நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழைகாலங்களில் நிலைமை மேலும் மோசமாக இருந்தது. இதையடுத்து அரசு  போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1314 கோடி செலவில் 4381 பஸ்கள் வாங்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்காக  விடப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பஸ்களும், 500 மின்சார பஸ்களும் விரைவில்  செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதன் முன்னோட்டமாக ஒரு மின்சார பஸ் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் பல்வேறு  நவீன வசதிகளுடன் கூடிய 100 பஸ்களை ரூ.19.50 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அனைத்து அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு  விடப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) 100 பஸ்களை ரூ.19.50 கோடி செலவில் தயாரிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்கப்படும் புதிய பஸ்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு வசதிகள்

பஸ்சின் தரைத்தளம், கட்டமைப்பு, மேல்தளம் ஆகியவை அகலமானதாக இருக்கும். புஷ்-பேக் சீட்டுகள் அமைக்கப்படும். அதிநவீன சொகுசு வீடியோ  கோச் ஆக கட்டமைக்கப்படும். முன்பகுதி, பின்பகுதியில் அதிக தடிமன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்படவுள்ளது. ஆபத்துகாலத்தில் வெளியேறுவதற்கான வழி, சுமைகளை வைக்க ரேக், நடத்துனருக்கான டிக்கெட் பெட்டி, தீ தடுப்பு கருவி, சீட் நம்பர் பிளேட்  இடம்பெறும். மொபைல் போன் சார்ஜர், எல்இடி ரூட் போர்டு, அகலமான படிக்கட்டுகள், முன்பகுதியில் பயணிகளுக்கான நுழைவாயில் உள்ளிட்ட வசதிகள்  இடம்பெறுகின்றன.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]