இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

2 ஆண்டுகளுக்குள் சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் மாண்டிசோரி கல்வி முறை அமல்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

10/31/2019 3:36:44 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மாண்டிசோரி கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று ஆணையர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைமுறைபடுத்தபட்டு வரும் மாண்டிசோரி கல்வி முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கல்வி துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் உள்ளன. தற்போது 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
மாநகராட்சி பள்ளிகளில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே வரும் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழு அளவு மாணவர் சேர்க்கை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் திறனுக்கு ஏற்ற வகையில் கல்வி கற்பிக்கும் மாண்டிசோரி கல்வி முறை தற்போது 22 சென்னை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும் என்பது விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறையை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்திற்குள் 38 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து 2020 - 21 கல்வியாண்டில் மேலும் 100 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.  அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி முறையை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 160 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக டிஜிட்டல் முறையிலும் சமூக வலைதளம் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]