கேரளாவில் 4 நாட்கள் கனமழை: கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’
10/21/2019 3:30:24 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி ைமயம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்ைக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு நேற்று ‘ஆரஞ்சு எச்சரிக்ைக’ விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை தொடரும் என்பதால் இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும், நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இன்று கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களிலும், நாளை (22ம் ேததி) கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களிலும், 23ம் தேதி கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம். கோழிக்ேகாடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும், 24ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ேநற்று தொடங்கிய மழை இன்று விடிய விடிய தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பின்னர் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.