இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

முதன் முதலாக 2021-ல் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கு உலகக்கோப்பை போட்டி: ஐசிசி அறிவிப்பு

10/17/2019 3:37:02 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

துபாய்: முதன் முதலாக வரும் 2012ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் 2023ம் ஆண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கான அட்டவணைகள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், ‘‘கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச மற்றும் பெரிய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை மாற்றி மாற்றி ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டிகளும் அடங்கும். ஐசிசியில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் சமமான எண்ணிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் நன்கு ஆலோசித்து 2023ம் ஆண்டு முதல் அடுத்த 8 ஆண்டுகளுக்கான இந்த அட்டவணையை தயார் செய்துள்ளோம். குறிப்பாக 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டிகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.

முதன் முதலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 2021ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறும். தொடர்ந்து இந்த உலகக்கோப்பை போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். தவிர மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பரிசுத்தொகை, பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரின் இறுதிப்போட்டி, சர்வதேச பெண்கள் தினத்தில் எம்சிஜி மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]